முகப்புகோலிவுட்

‘அண்டாவ காணோம்’ படத்தின் புதிய டீசர்

  | September 17, 2018 12:18 IST
Andava Kaanom Movie

துனுக்குகள்

  • இப்படத்தில் ‘அண்டா’விற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் மக்கள் செல்வன்
  • இந்த படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது
  • படத்தை வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் மிரட்டலான வில்லியாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதனைத் தொடர்ந்து ‘வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்டாவ காணோம்’.

சி.வேல்மதி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டா’விற்கு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
 

இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்’ நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். இந்நிலையில், படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்