முகப்புகோலிவுட்

'காளியாக உருமாறிய நந்திதா' - வெளியானது 'IPC 376' படத்தின் இரண்டாம் சிங்கள்..!

  | August 14, 2020 13:51 IST
Angali Thayae

துனுக்குகள்

  • 2008ம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்று கன்னட படத்தில் நடித்ததன்
  • இப்போது இவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் தான் IPC 376
  • இந்த படத்தில் இருந்து 'அங்காளி தாயே' என்ற இரண்டாவது சிங்கள்
2008ம் ஆண்டு வெளியான 'நந்தா லவ்ஸ் நந்திதா' என்று கன்னட படத்தில் நடித்ததன் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. அறிமுகம் கன்னட திரைப்படம் என்றாலும் அதற்குப் பின் அதிக அளவில் தமிழ்ப் படங்களில் தான் நடித்துள்ளார் நந்திதா. 2012ம் ஆண்டு 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.?, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமபார். குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.? படத்தில் இவர் ஏற்று நடித்த 'குமுதா' என்ற கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டுவருகிறது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் இப்போது இவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் தான் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த கமர்சியல் படமாக இது உருவாகிவருகிறது இந்த படம். இந்த படத்தில் வரும் பல ஆக்ஷன் காட்சிகளில் நந்திதா டூப் இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ள இந்த படம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறித்த படம் என்று கூறப்படுகிறது, படத்தின் தலைப்பும் அதற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது.

கொரோனா காரணமாக தடைபட்டு கிடக்கும் பல படங்களில் இதுவும் ஒன்று என்றால் அதுமிகையல்ல. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது அதன் பிறகு சிறுது நாட்களில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கள் பாடல் ஒன்றும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து 'அங்காளி தாயே' என்ற இரண்டாவது சிங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com