தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
அவ்வப்போது ஆல்பம் பாடல்களக்கு இசைஅமைத்து பாடியும் அசத்தி வருகிறார்.
ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு இசை அமைத்து வருகிறார் இவர்.
தற்போது தொடர்சியாக பல படங்களுக்கு இசை அமைத்து வரும் அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, இசை அமைப்பாளராவதற்கு முன்பு நான் காதலித்தேன், தற்போது படங்களில் இசை அமைக்கவே நேரம் கடந்து விடுவதால் காதலிக்க நேரம் இல்லை. அதற்காக அப்படியே இருக்க மாட்டேன். விரைவில் காதலிப்பேன் என்று கூறியிருக்கிறார்.