முகப்புகோலிவுட்

அனிருத் குரலில் விஜய்சேதுபதி படத்தில் ஒரு பாட்டு!!!

  | September 12, 2019 11:21 IST
Anirudh

துனுக்குகள்

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது
  • பிகில்,கைதி ஆகிய படங்கள் இந்த தீபாவளி அன்று வெளியாகிறது
  • இந்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்
சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் படம் சங்கத்தமிழன். விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் கமலா என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பாடலாசிரியர் பிரான்சிஸ் எழுதிய "சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்" என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். விஜயா புரெடக்ஷன் சார்பாக பாரதி ரெட்டி தயாரிக்கும் இப்படம் தீபாவளி விடுமுறை நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் பிகில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்