முகப்புகோலிவுட்

கையில் 5 குழந்தைகளுடன் ஹரிஷ் கல்யாண்..! அனிருத் வெளியிட்ட போட்டோ..!

  | January 10, 2020 18:56 IST
Dharala Prabhu

இசையமைப்பாளர் அனிருத்  வெளியிட்ட ஹரிஷ் கல்யாணின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரலாகிவருகிறது.

இசையமைப்பாளர் அனிருத்  வெளியிட்ட ஹரிஷ் கல்யாணின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரலாகிவருகிறது.

தனுசு ராசி நேயர்களே திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘கசட தபற' திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதைத் தொடர்ந்து ‘தாராளப் பிரபு' மற்றும் ‘பெல்லி சூப்புலே' எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.
கசட தபற மற்றும் பெல்லி சூப்புலே ரீமேக் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், தற்போது ‘தாராளப் பிரபு' திரைப்படத்தின் படப்பிடிப்பும் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதனை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். பிரம்மாவைப் போல் தாமரையில் அமர்ந்திருக்கு ஹரிஷ் கல்யாணின் கைகளில் 5 குழந்தைகள் இருக்கும் அந்த மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்