ரஜினி நடித்து வரும் பிகில் படத்தின் இசை நவம்பர் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக அனிருத் தெறிவித்திருக்கிறார்.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபு இணைந்திருக்கிறார். மேலும் நிவேதா தாமஸ், தம்பி ராமையா, ஸ்ரீமன், பாலிவுட் நடிகர்கள் சிலர் நடித்து வருகிறார்கள்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை பாண்டி பஜாரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் அனிருத், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தனக்கும் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று அவர் கூறினார்.