முகப்புகோலிவுட்

ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத் - சிவகார்த்திகேயன்!

  | July 05, 2019 15:16 IST
Anirudh

துனுக்குகள்

  • ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • சாச்சி இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • சிவகார்த்திகேயன்- அனிருத் இப்படத்தில் பாடல் பாடியிருக்கிறார்கள்
அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிக்சர்'. இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க பல்லக் லால்வானி நாயகியாக நடித்திருக்கிறார்.
          
ஜிப்ரான் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் சிவகார்திகேயன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து தற்போது அனிருத் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
 
இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ‘எனது இசையில் முதன் முறையாக அனிருத் பாடி இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது, பாபா பிளாக் ஷிப் என்கிற பாடலை அவர் பாடி இருக்கிறார்' என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்