முகப்புகோலிவுட்

அனிருத் குரலில் ‘ரங்கா’ முதல் சிங்கிள் வெளியானது..!

  | February 14, 2020 10:18 IST
Sibi Sathyaraj

இப்படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் சாயலில் இருக்கும் என படக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிபி சத்யராஜ் நடிக்கும் ‘ரங்கா' திரைப்படத்திலிருந்து அனிருத் பாடியுள்ள முதல் பாடல் வெளியாகியுள்ளது.

வினோத் DL இயக்கத்தில் சிபி சத்யராஜ் கதாயாகனாக நடிக்கும் திரைப்படம் ‘ரங்கா'. இப்படத்தில் சிபிக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகர் சதிஷ், மோனிஷ் ரஹேஜா, சுஜாதா பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை BOSS மூவீஎஸ் பேனரில் விஜய் கே. செல்லய்யா தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு ராம்ஜீவன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான ஒளிப்பதிவு வேலைகளை அர்வி கவனிக்க, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

2017-ஆம் ஆண்டின் பாதியில் தொடங்கப்பட்ட இப்படம், இந்த ஆண்டின் இடையைல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும், இப்படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் சாயலில் இருக்கும் என படக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ‘தீராமல்' எனும் இப்பாடல் காதலர் தின ஸ்பெஷலாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com