அஞ்சலி, யோகி பாபு, விஜய் டி.வி புகழ் ராமர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் காமெடி கதைக்களம் கொண்ட புதிய படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கவிருக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகிறது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீ கூறும் போது,
மக்கள் இடைவிடாமல் சிரிக்கும் வகையிலான நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.
யோகி பாபு மற்றும் ராமர் இருவரும் படம் முழுவதும் வந்து அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம்..!” என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு இயக்குநராக பொறுப்பேற்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்திற்கான பாடல்களை ‘கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார்.
மணி ராம் என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில் ராமர் நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நடிக்க சஞ்சய் கல்ராணி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.