முகப்புகோலிவுட்

விரைவில் அஞ்சலியின் ரத்தை வேட்டை..!

  | May 15, 2019 17:04 IST
Anjali

துனுக்குகள்

  • ராஜு விஸ்வநாத் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • அஞ்சலி, யோகி பாபு இப்படத்தில் நடித்திருக்கிறார்
  • நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது
இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி, யோகி பாபு, மைம் கோபி, சாம் ஜோன்ஸ் இன்னும் பலர் நடித்துள்ள படம் 'லிசா'.
திகிலூட்டும் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
 
தமிழில் 3டி தொழில்னுப்பத்தில் உருவாகி இருக்கும் முதல் திகில் திரைப்படம் இப்படம் என்பத இப்படத்தின் இன்னொரு பெருமை.
 
இப்படத்தின் ட்ரெய்லரில் தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு
செல்லும் கதாநாயகியும், கதாநாயகனும் அங்குள்ள அம்மானுஷ்யத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கிறது.
எலும்பு கூடுகள், மர்மமான மரணம், என அடுத்தடுத்து திகில் காட்சிளில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.
 
சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை பார்வையாளர்களை அச்சுறுத்துகிறது. இப்படத்தில் இடம் பெறும் ரத்த வேட்டை பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்கிறது. பி.ஜி.முத்தையா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்