முகப்புகோலிவுட்

கீர்த்தி சுரேஷ்க்கு கல்யாணமா..!! மாப்பிள்ளை யாருனு தெரியுமா..?

  | April 03, 2020 13:13 IST
Keerthy Suresh

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘நடிகையர் திலகம்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற இவர், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய அவர், ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீம ராஜா, சண்டகோழி 2 என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அவர் கடைசியாக  விஜய்யின் ‘சர்க்கார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து மிஸ் இந்தியா, பென்குயின், மேலும் மலையாளத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்களில் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர்,  தற்போது தெலுங்கில் குட் லக் சகி, ரங் தே மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 168-வது திரைப்படமான ‘அண்ணாத்த'வில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

கீர்த்தி சுரேஷின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் ஒரு முக்கிய அரசியல் கட்சியுடன் நெருக்கமாக தொடர்புடையவர். எனவே, கீர்த்தி சுரேஷின் தந்தை அரசியல் உறவுகளுடன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், கீர்த்தி சுரேஷும் தனது தந்தையின் யோசனைக்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மாப்பிள்ளை யார் மற்றும் திருமண தேதி குறித்த விவரங்கள் இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், சமீபத்திய அறிக்கைகளின்படி கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து ஒரு பெரிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com