முகப்புகோலிவுட்

'அண்ணாத்த டைட்டில் லுக் வீடியோ' - டி. இமான் வெளியிட்ட புதிய வீடியோ : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

  | February 27, 2020 09:33 IST
Annaathe

குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

துனுக்குகள்

 • 'அண்ணாத்த டைட்டில் லுக் வீடியோ'
 • டி. இமான் வெளியிட்ட புதிய வீடியோ
 • திரையுலகில் முடிசூடிய மன்னனாக வலம்வரும் சூப்பர் ஸ்டார்
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் முடிசூடிய மன்னனாக வலம்வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு வரை தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு வெறி தனமான 'அண்ணாத்த' என்ற பெயர்சூட்டி அந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோ ஒன்றையும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்  பிக்சர்ஸ் அண்மையில் வெளியிட்டது. 

தற்போது அந்த டைட்டில் லுக் வீடியோவில் வரும் அந்த பின்னணி இசையை  இந்த படத்தின் இசையமைப்பாளர் இமான் வாசிக்கும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கிராமத்துப் பின்னணி உள்ள விவசாய கதை கொண்ட படமாக உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அந்த பின்னணி இசையை மிகவும் ரசித்து அவர் வாசிப்பது இந்த படத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com