முகப்புகோலிவுட்

'வதந்திகளை நம்ப வேண்டாம்' - 'அண்ணாத்த' படக்குழு கொடுத்த அப்டேட்..!!

  | July 30, 2020 08:58 IST
Annathe Movie

துனுக்குகள்

 • ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் முடிசூடிய மன்னனாக
 • அதன் பிறகு தற்போது அந்த டைட்டில் லுக் வீடியோவில் வரும் அந்த பின்னணி
 • படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில்
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் முடிசூடிய மன்னனாக வலம்வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு வரை தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வந்த படத்திற்கு வெறித் தனமான 'அண்ணாத்த' என்ற பெயர்சூட்டி அந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோ ஒன்றையும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்  பிக்சர்ஸ் அண்மையில் வெளியிட்டது. 

அதன் பிறகு தற்போது அந்த டைட்டில் லுக் வீடியோவில் வரும் அந்த பின்னணி இசையை  இந்த படத்தின் இசையமைப்பாளர் இமான் வாசிக்கும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டார். கிராமத்துப் பின்னணி உள்ள விவசாய கதை கொண்ட படமாக உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாத்தே படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் அதனை முற்றிலும் மறுத்துள்ளது படக்குழு. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சகஜநிலை திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com