முகப்புகோலிவுட்

'Bigil' படத்தின் அசத்தலான அறிவிப்பு! குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!

  | October 11, 2019 10:28 IST
Vijay

துனுக்குகள்

  • வரும் 19-20தேதிகளில் போட்டிகள் நடைபெறவிருக்கிறது
  • பிகில் படத்தின் டிரெய்லர் வரும் 12ம் தேதி வெளியாக இருக்கிறது
  • ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது
 
Bigil: கால்பந்தாட்ட போட்டியை நடத்தவிருப்பதாக பிகில் படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ(Atlee) இயக்கத்தில் விஜய்(Vijay) நடிக்கும் படம் பிகில். விஜய்- அட்லி இணைந்து பணியாற்றும் மூன்றவது படம் இதுவாகும்.  இந்த பெண்கள் கால்பந்தாட்டத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ள படக்குழு சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தது.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழு வித்தியாசமான புரமோஷனில் களமிறங்கி இருக்கிறது, இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்