முகப்புகோலிவுட்

காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுபமா பரமேசுவரன்?

  | June 13, 2019 17:26 IST
Anupama Parameswaran

துனுக்குகள்

  • கொடி படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்
  • மலையாளத்திர் பிரேமம் படத்தில் நடித்திருந்தார்
  • தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருகிறார் இவர்
தமிழில் தனுசுடன் கொடி படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுப்பமா பரமேஷ்வரன். இதை அடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் பும்ராவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது பரவியது.
 
அதற்கு காரணம் டுவிட்டரில் பும்ராவின் டுவிட்டுகளை ஒன்று விடாமல் அனுபமா ரீடிவீட் செய்கிறார். பதிலுக்கு பும்ராவும் அனுபமா பரமேஸ்வரனின் டுவிட்டுகளை லைக் செய்கிறார்.இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இந்த வதந்திக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக அவர், ‘எனக்கும், பும்ராவுக்கும் காதல் எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே...' என்று தெரிவித்துள்ளார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்