முகப்புகோலிவுட்

ராட்சசன் ரீமேக்கில் நடிக்கும் அந்த நடிகை யார்??

  | February 26, 2019 15:37 IST
Ratsasan

துனுக்குகள்

  • தமிழில் ராட்சசன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
  • இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர்.
  • இப்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர்.
இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.  தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.  தற்போது தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவருக்கு தெலுங்கு திரையுலகில் மவுசு கூடியுள்ளது. 
 
இதனை தொடர்ந்து, தமிழில் சமீபத்தில் 'ராட்சசன்' திரைப்படம் வெளியானது.  இதில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடித்திருந்தனர்.  இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.  இதனையடுத்து, இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.  இதில் கதாநாயகியாக அனுபமா நடிக்கவுள்ளார். 
 
 
தற்போது நடிகை அனுபமா இப்படத்திற்காக தன் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.  தன் கெட்டப்பை மாற்றிய அனுபமா, அப்புகைப்படத்தை தன் சமூக வலைதளங்களை வெளியிட்டிருந்தார்.  தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்