முகப்புகோலிவுட்

மூன்று மொழிகளில் வெளியாகும் அனுஷ்காவின் 'நிசப்தம்' - OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | September 18, 2020 15:52 IST
Silence

துனுக்குகள்

 • பின்னர் தயாரிப்பாளர் ட்விட்டர் வாக்கெடுப்பு மூலம் ரசிகர்கள் அளித்த
 • இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, சாக்ஷி என்ற பேச்சுத்திறன் அற்ற கலைஞராக
 • எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் அக்டோபர் 2ம் தேதி OTT தளத்தில் மூன்று
ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்'. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகியுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டார். அதில் ரசிகர்கள் படத்தை எங்கு பார்க்க விரும்புகிறார்கள் என்று வாக்களிக்கும்படி கேட்டிருந்தார். வாக்கெடுப்பில் தியேட்டர்கள், OTT மற்றும் எதுவாக இருப்பினும் சரிதான் என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருதன. அதில் OTTக்கு ரசிகர்கள் 56 சதவீதத்துடன் வாக்களித்தனர்.

பின்னர் தயாரிப்பாளர் ட்விட்டர் வாக்கெடுப்பு மூலம் ரசிகர்கள் அளித்த பதிலுக்கு நன்றி தெரிவித்ததுடன் தனது ட்வீட்டில், “உங்கள் கருத்துக்கு நன்றி. அனைவரையும் திருப்திப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், உங்கள் ஒத்துழைப்பு எங்கள் அணிக்கு மிகவும் மதிப்புமிக்கது” என்று கூறியிருந்தார். இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி சாக்ஷி என்ற பேச்சுத்திறன் அற்ற கலைஞராக நடிக்கிறார். அதேபோல் இப்படத்தில் மாதவன் ஒரு பிரபல இசைக்கலைஞராக இடம்பெறுகிறார். மேலும், அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவும் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். தற்போது இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் அக்டோபர் 2ம் தேதி OTT தளத்தில் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com