முகப்புகோலிவுட்

ஸ்பானிஷ் மொழிப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அனுஷ்கா?

  | June 10, 2019 18:07 IST
Anushka

துனுக்குகள்

 • பாகமதி படத்தில் நடித்து வருகிறார் இவர்
 • மாதவனுடன் சைலன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்
 • ஸ்பானிஸ் மொழிப்படத்தை கபீர் லால் ரீமேக் செய்கிறார்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா. இவர் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த பாகுபலி படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார். வெளிநாடு சென்று உடல் எடையையும் குறைத்துக்கொண்டார். அதன் பின் அவருக்கு படவாய்ப்பிகள் வரத்தொடங்கியது.
 
பாகமதி படத்திற்குப் பின் அனுஷ்கா சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் ஒப்பந்தமானார். தற்போது மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
 
தெலுங்கில் இந்தப் படம் நிசப்தம் என்ற பெயரில் தயாராகிறது. அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஸ்பானிஷ் மொழி திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
 
2010ம் ஆண்டு வெளியான ஜூலியாஸ் ஐஸ் என்ற அந்த படத்தை  கபீர் லால் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com