முகப்புகோலிவுட்

ஷுட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது? அனுஷ்கா விளக்கம்!

  | June 28, 2019 12:15 IST
Silence

துனுக்குகள்

 • மாதவனுடன் லைசன்ஸ் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா
 • பாகமதி படத்திற்கு பிறகு இப்படத்தில் நடிக்கிறார் இவர்
 • ரெண்டு படத்திற்கு பிறகு மாதவனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்
பாகமதி படத்திற்குப் பின் அனுஷ்கா சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
 
தெலுங்கில் இந்தப் படம் நிசப்தம் என்ற பெயரில் தயாராகிறது. அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிற நிலையில் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என செய்தி வெளியானது. இதனை அடுத்து அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் மகிழ்ச்சியாகவும், நலமுடனும் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறேன். லவ் யூ ஆள்” என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அவர்கள் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on

 
இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஸ்பானிஷ் மொழி திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
2010ம் ஆண்டு வெளியான ஜூலியாஸ் ஐஸ் என்ற அந்த படத்தை  கபீர் லால் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com