முகப்புகோலிவுட்

பிரசன்னா நடிப்பில் 'ஸ்ருதி மாறாதே' - படப்பிடிப்பை தொடங்கி வைத்த சுந்தர். சி..!

  | September 14, 2020 13:15 IST
Shruthi Marathe

துனுக்குகள்

 • AVNI மூவிஸ், பிரபல நடிகை குஷ்பூ மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குநருமான
 • AVNI மூவிஸ் தயாரிப்பில் ஏற்கனவே பல படங்கள் வெளியாகி உள்ளது
 • தற்போது திரைத்துறையில் 75 பேர் என்ற அளவைக் கொண்டு படப்பிடிப்புகள்
AVNI மூவிஸ், பிரபல நடிகை குஷ்பூ மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர் சி அவர்களின் தயாரிப்பு நிறுவனம். தற்போது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 6வது படமாக உருவாக உள்ளது 'ஸ்ருதி மாறாதே' என்ற படம். இந்த படத்தை பத்ரி என்பவர் இயக்க முக்கிய வேடத்தில் நடிகர்கள் ஷாம், பிரசன்னா மற்றும் அஸ்வின் காகமாவு ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவர்களும் இந்த இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

AVNI மூவிஸ் தயாரிப்பில் ஏற்கனவே பல படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை, மீசைய முறுக்கு மற்றும் நான் சிரித்தாள் ஆகிய திரைப்படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படமாக உருவாக உள்ளது "ஸ்ருதி மாறாதே". தற்போது திரைத்துறையில் 75 பேர் என்ற அளவைக் கொண்டு படப்பிடிப்புகள் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.     

 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com