முகப்புகோலிவுட்

'நினைத்தது ஒன்னு.. நடக்கிறது ஒன்னு..' - வருத்தத்துடன் ட்வீட் போடும் ஷெரின்

  | April 30, 2020 08:03 IST
Coronavirus

துனுக்குகள்

 • கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சம் காரணமாக நாடு தழுவிய
 • சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால்
 • என்று கூறி மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சம் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. உலக பல வகை தொழில்கள் முடங்கியுள்ளதால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளே செய்வதறியாது திகைத்துபோய்யுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது. பிற துறைகளை போலவே சினிமா துறையும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா சார்ந்த தொழிலார்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டை பல கனவுகளோடு தொடங்கிய பலர் அந்த கனவுகள் தடைபடுவதால் வருத்தத்தில் உள்ளனர். 

தற்போது துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷெரின் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று நான் நினைத்தது ஒன்று அனால் தற்போது நடப்பது ஓன்று என்று கூறி மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 2015ம் ஆண்டு உதயநிதி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான 'நண்பேன்டா' படத்திற்கு பிறகு இவர்  பிக் பாஸ் தொடரில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com