முகப்புகோலிவுட்

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்கு!

  | November 08, 2019 14:40 IST
Nadigar Sangam

துனுக்குகள்

 • நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது
 • நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது
 • விஷால் தரப்பினர் அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

தமிழ் நாடு அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது போல தற்போது தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கும் தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரியாக ஏஐஜி கீதாவை நியமித்துள்ளது. இந்த அதிகாரி நியமனம் தற்போது நடிகர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில புகார்கள் காரணமா அந்த வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்னும் நியமனம் செய்யப்படாமல் இருப்பதால் சங்க வேலைகள் நிலுவையில் இருப்பதால் சிறப்பு அதிகாரி நியமனம் நடைபெற்றிருக்கிறது. இதனை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர், சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் தனிப்பட்ட சிலர் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து நடிகர் சங்கத்திற்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com