முகப்புகோலிவுட்

“அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது” - நயன்தாரா வருத்தம்..!

  | November 06, 2019 11:01 IST
Nayanthara

துனுக்குகள்

 • நயன்தாரா ரஜினியின் தர்பார் படத்தில் நடித்துவருகிறார்.
 • கஜினி படத்தில் நடித்ததே தனது மிகப் பெரிய தவறு - நயன்தாரா
 • அடுத்ததாக ‘நெற்றிக் கண்’ படத்தில் நடிக்கிறார்.
கஜினி திரைப்படத்தில் நடித்ததே சினிமா வாழ்க்கையில் தான் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவு என்று நயன்தாரா கூறியுள்ளார். 

ஹரி இயக்கிய‘ஐயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையுடன் முன்னனி கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் நடிக்கும் கதைகளையும் கதாப்பாத்திரங்களையும்  மிகவும் புத்திசாலித்தனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘அறம்', ‘இமைக்கா நொடிகள்' போன்ற தைரியமான ரோலாக இருந்தாலும் சரி, ‘விஸ்வாசம்', ‘நானும் ரௌடி தான்' போன்ற நுட்பமான கதாபாத்திரமாக இருந்தாலும், ‘ஐரா', ‘கோலமாவு கோகிலா' போன்ற மாறுபட்ட தோற்றமாக இருந்தாலும், நயன்தாரா எந்தவொரு பாத்திரத்தையும் எடுத்து திறமையாக நடிக்ககூடியவர்.

தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல ரேடியோ ஒன்றில் பேட்டியளித்த அவர், தனது 15 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு என அவர் கூறிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரியா நடித்த ‘கஜினி' படத்தில் நடித்தது குறித்து வருத்தத்தோடு பேசியுள்ளார். அந்தப் படத்தில், சித்ரா கதாப்பாத்திரத்தில் நடித்ததே, வாழ்க்கையில் அவர் எடுத்த மிக மோசமான முடிவு என்று கூறியுள்ளார். அந்தக் கதாபாத்திரம் தன்னிடம் விவரிக்கப்பட்டதற்கும், திரையில் காட்டப்பட்டற்கும் உண்மையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்ததாக கூறினார். அதனால் மிகவும் நம்பி ஏமாற்றாம் அடைந்ததாகவவும், அதன் பின்னரே கதைகளை கவனமாக கேட்கத் தொடங்கியதாக தெரிவித்தார். குறிப்பாக மல்டி ஸ்டாரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்கிறாராம்.

சந்திரமுகி படத்தில் ‘துர்கா' கதாப்பத்திரம் மற்றும் சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆட முடிவெடுக்கும்போதும், தனக்குள் சந்தேகம் மற்றும் இரண்டாவது எண்ணங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், இந்த படங்களும் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய ப்ரேக் கொடுத்ததாக கூறினார்.

பிகில் பிளாக்பஸ்டரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தர்பார் வெளியீட்டிற்காக காத்திருக்கும் அவர், அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக் கண் படத்தில் நடிக்கவுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com