முகப்புகோலிவுட்

யூ-டியூப்புடன் இணைந்து நட்சத்திர பாடகரை தேடும் ஏ.ஆர்.ரஹ்மான்

  | September 14, 2018 15:26 IST
Arrived Series

துனுக்குகள்

  • ரஹ்மான் கைவசம் ‘2.0, சர்கார், செக்கச்சிவந்த வானம், SK படம்’ உள்ளது
  • நல்ல நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம் என ரஹ்மான் தெரிவித்துள்ளார்
  • அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் தெரிவிக்கவும்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கைவசம் ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’, சிவகார்த்திகேயனின் சைன்ஸ்-ஃபிக்ஷன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘2.0’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம்’ படங்களின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, யூ-டியூப்புடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்களுக்கு இசையில் பேரார்வம் இருக்கிறதா? இருந்தால், நீங்கள் ஸ்டேஜ் ஏறுவதற்கான தருணம் இது. நாங்கள் ஒரு நல்ல நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் தெரிவிக்கவும்” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்