முகப்புகோலிவுட்

ஒரு கும்பல் என்னைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது- ஏ. ஆர். ரகுமான்

  | July 25, 2020 21:58 IST
Ar Rahman

ரகுமான் இசையில் நேற்று, சுஷாந்த் நடிப்பில் கடைசி திரைப்படமான ‘தில் பெச்சாரா’ OTT தளமான ஹாட்ஸ்டாரில் வெளியானது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சமீபத்தில் வெளியான தனது பாலிவுட் திரைப்படங்களைப் பற்றி பேசியுள்ளார். அவர் ஏன் பல பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கவில்லை என்று கேட்கப்பட்ட நிலையில், தான் நல்ல திரைப்படங்களை மறுக்கவில்லை என்றும், ஆனால் ஒரு கும்பல் தன்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புகிறது என்று நினைப்பதாகக் கூறினார்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பேசிய ஏ.ஆர். ரகுமான், தில் பெச்சாரா இயக்குநர் முகேஷ் சாப்ரா தன்னிடம் வந்தபோது, அவர் இரண்டு நாட்களில் நான்கு பாடல்களைக் கொடுத்தார். ரகுமானை அணுக வேண்டாம் என்று பலர் முகேஷிடம் கூறியதாகவும், தவறான கதைகளைச் சொன்னதாகவும் முகேஷ் ரகுமானிடம் கூறியுள்ளார். முகேஷ் இதைச் சொன்ன பிறகுதான், ஒரு கும்பல் தனக்கு எதிராகச் செயல்படுவதால், நல்ல திரைப்படங்கள் தன்னிடம் வருவதில்லை என்பதை உணர்ந்ததாக ரகுமான் கூறினார்.

மேலும், மக்கள் அவர் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் குறிப்பிட்ட சிலர் அவர் நல்ல விஷயங்களைப் பெறுவதைத் தடுக்கிறார்கள் என்று கூறிய ரகுமான், மேலும் அவர் விதியை நம்புவதாகவும், எல்லாமே கடவுளிடமிருந்து வருகிறது என்றும் கூறினார். மக்கள் அழகான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்றார் ரகுமான்.

ரகுமான் இசையில் நேற்று, சுஷாந்த் நடிப்பில் கடைசி திரைப்படமான ‘தில் பெச்சாரா' OTT தளமான ஹாட்ஸ்டாரில் வெளியானது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com