முகப்புகோலிவுட்

ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட பிரத்யேக த்ரோபேக் வீடியோ.!

  | July 04, 2020 23:45 IST
Ar Rahman

பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் பென்னி தயால் இருவரும் இணைந்து ‘கடல்’ படத்தில் இடம் பெற்ற ‘அடியே அடியே’ பாடலைப் பாடும் வீடியோ தான் அது.

‘ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர். ரஹ்மான் கடைசியாக விஜய் நடித்த ‘பிகில்' திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார், இப்போது மணிரத்னம் இயக்கிவரும் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா' போன்ற பல  படங்களில் பணியாற்றி வருகிறார்.

‘இசைப் புயல்' இப்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை த்ரோபேக் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அவருடைய லைவ் கான்சர்ட் ஒன்றில், பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் பென்னி தயால் இருவரும் இணைந்து ‘கடல்' படத்தில் இடம் பெற்ற ‘அடியே அடியே' எனும் ஹிட் பாடலைப் பாடும் வீடியோ தான் அது. இருவரின் பிரத்யேக குரலிலும் அந்த பாடலைக் கேட்டு வியந்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களைப் பாராட்டியுள்ளார்.

Throwback ...Both the boys slamming in Chennai! Benny Dayal Sid Sriram BToS Productions #ARRLive

Posted by A.R. Rahman on Friday, 3 July 2020
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com