முகப்புகோலிவுட்

‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

  | October 05, 2019 12:00 IST
Thalaivi Movie

துனுக்குகள்

 • ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கி வருகிறார்
 • கங்கனா ரணாவத் இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார்
 • ஜி.வி.இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக தயாராகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த படத்தில் கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
 
தற்போது இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் பெரிய பங்கு வகித்த எம்ஜிஆர் ரோலில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயலலிதாவின் இளமை வயது முதல் நடக்கும் சம்பவங்கள் காட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
pum7is7

 
கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கி வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த இணையத் தொடருக்கு ஜெயலலிதாவின் உறவினர்களிடமிருந்து எதிர்புகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் சில இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com