முகப்புகோலிவுட்

மக்கள் திலகமாகவே மாறிய அரவிந்த் சாமி..! ‘தலைவி’ பட எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

  | January 18, 2020 12:13 IST
Thalaivi Movie

துனுக்குகள்

 • தலைவி திரைப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
 • இப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.
ஜெ. ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமான தலைவி படத்திலிருந்து எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகிவருகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தலைவி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார்.

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சைலேஷ் ஆர். சிங்க் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். ஜனவரி 17-ஆம் தேதியான நேற்று எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து‘எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக்' வீடியோ வெளியிடப்பட்டது. அரவிந்த் சாமி அச்சு அசலாக எம்.ஜி.ஆராகவே மாறி நடித்துள்ள இந்த சிறிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com