முகப்புகோலிவுட்

எம்.ஜி.ஆர் போலவே மாறிய அரவிந்த்சாமியின் அசத்தல் மாற்றம்!

  | November 14, 2019 14:16 IST
Thalaivi

துனுக்குகள்

  • ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்
  • அரவிந்த்சாமி இந்த படத்தில் எம்.ஜி.ஆர்.கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
  • ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார்
தலைவி படத்திற்காக எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் போலவே தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற தலைப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதற்காக கங்கனா ரணாவத் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
 
மேலும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்சாமி  நடிக்கவுள்ளார். இதற்காக தற்போது தனது தோற்றத்தை வித்தியாசமாக அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே மாற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கௌதம் வாசுதேவ் மேனன் வெப் சீரிஸாக எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கும் தலைவி படத்தில் இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இது குறித்த விரிவான செய்திகள் விரைவில் வெளியாக இருக்கிறது. 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்