முகப்புகோலிவுட்

பிகில் படத்தின் சென்சார் குறித்து அர்ச்சனா கல்பாத்தி அதிரடி!

  | October 14, 2019 17:37 IST
Bigil

துனுக்குகள்

  • வரும் தீபாவளி அன்று பிகில் படம் வெளியாக இருக்கிறது
  • சென்சார் வழங்குவதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை அர்ச்னா கல்பாத்தி
  • அட்லி மற்றும் விஜய்க்கு ஷாருகான் வாழ்த்து
Bigil: பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்து கூறியிருக்கிறார்.
 
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் – அட்லி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘பிகில்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர் வில்லு படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். மேலும் சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதனை அடுத்து தற்போது பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இவர். மேலும் இவர்களுடள் யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான “சக்தே இந்தியா” திரைப்படத்தின் சாயல் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். மேலும் பிகில் ட்ரெய்லர் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகர் ஷாரூக் கான், படம் சிறப்பான ஒன்றாக அமைய நண்பர்கள் அட்லீ, விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய வாழ்த்துகள். “சக்தே இந்தியா” படம் போல் உத்வேகத்தை அளித்துள்ளது”என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து ஷாருகன் நடித்த “சக்தே இந்தியா' படத்தின் ரீமேக் உரிமையை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த தகவல் பொய் என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். மேலும் பேசியுள்ள அவர் பிகில் திரைப்படத்தின் சென்சாருக்கு எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்