முகப்புகோலிவுட்

‘விஸ்வாசம்' டிரெய்லரை ரசித்ததோடு கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்

  | December 31, 2018 21:58 IST
Viswasam Celebration

துனுக்குகள்

  • இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது
  • படத்தை வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘வீரம், வேதாளம்' படங்களின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் காம்போவில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்'. இதனையடுத்து அஜித்தின் 58-வது படத்தையும் சிவாவே இயக்கியுள்ளார். ‘விஸ்வாசம்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், ஜெகபதி பாபு, யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, ரவி அவானா, முக்தர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. தற்போது, இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ முகாம்களில் இந்த டிரெய்லரை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி, மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்