முகப்புகோலிவுட்

பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

  | November 19, 2019 16:03 IST
Gnanavel Raja

துனுக்குகள்

 • வருமான வரித்துறையினர் இந்த வழக்கை தொடுத்துள்ளனர்
 • நீதி மன்றம் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிரப்பித்துள்ளது
 • திரைப்படங்களின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார் இவர்
முன்னணி கதாநாயகர்களின் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வரும் ஞானவேல் ராஜாவுக்கு நீதி மன்றம் பிடி வாரண்ட் பிரப்பித்துள்ளது. 

சில்லுனு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

தொடர்ந்து தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். மேலும் திரைப்படங்களை வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது வருமான வரித்துறையினர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்.
வருமான வரித் துறை சார்பில், வருமான வரித் துறை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவே இல்லை. இதையடுத்து வருமான வரித் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா மீது வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் ஞானவேல் ராஜா தொடர்ந்து ஆஜராவில்லை. இதையடுத்து, ஞானவேல் ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com