முகப்புகோலிவுட்

‘அருள்நிதி 14’ பட தலைப்பை வெளியிடும் வெற்றிமாறன்.!

  | July 20, 2020 12:36 IST
Arulnithi 14

அருள்நிதியின் பிறந்தநாளான நாளை (July21) இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

வம்சம், உதயன், மௌன குரு, ஒரு கன்னியும் மூன்று களவாணியும், டீ மான்டி காலனி, ஆறாது சினம் என பல குறிப்பிடத்தக்க நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல நடிகர் என்ற பெயரையும் ஆதரவையும் பெற்றுள்ளவர் அருள்நிதி. கடைசியாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 திரைப்படத்தில் காணப்பட்ட அருள்நிதி, தெற்போ தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் திரைப்படம் மற்றும் என். ராஜசேகர் இயக்கத்தில் ‘களத்தில் சந்திப்போம்' ஆகிய படத்தில் ஜீவாவுடன் இணைந்து ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அருள்நிதியின் 14-வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை இன்னிசை பாண்டியன் இயக்குகிறார். விக்ரமின் ‘கோப்ரா' படத்திற்கு வசனகர்த்தாவான அவர், இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் ‘குற்றம்23' புகழ் இயக்குநர் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அருள்நிதி14 திரைப்படத்தை Five Star Creations பேனரின் கீழ் கதிரேசன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்துக்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். இவர் மாயா, கேம் ஓவர், இறவாக்காலம் போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர்.

அருள்நிதி14 படத்தின் தலைப்பு அருள்நிதியின் பிறந்தநாளான நாளை (July21) வெளியிடப்படவுள்ளது. இதனை ‘அசுரன்' இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் மதியம் 12 மணிக்கு வெளியிடவுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com