முகப்புகோலிவுட்

'ஹெலன்' - மகளோடு களமிறங்கும் 'இணைந்த கைகள்' நாயகன்

  | February 11, 2020 16:55 IST
Arun Pandian Daughter Keerthi Pandian

1985ம் ஆண்டு வெளியான விசுவின் சிதம்பர ரகசியம் படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அருண் பாண்டியன்

துனுக்குகள்

  • 'ஹெலன்' - மகளோடு களமிறங்கும் 'இணைந்த கைகள்' நாயகன்
  • இவர் ஒரு சிறந்த மேடை நாடக நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது
  • இந்த படத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்க உள்ளார்.
1985ம் ஆண்டு வெளியான விசுவின் சிதம்பர ரகசியம் படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அருண் பாண்டியன். ஊமை விழிகள், விலங்கு, ஊர் குருவி என்று பல படங்களில் நடித்து விரைவில் பிரபலமானார். கருப்பு உருவம் என்ற போதும் தனது உயரத்தாலும், கம்பீர குரலாலும் அவர் தனித்து காணப்பட்டார். 1990ம் ஆண்டு வெளியான 'இணைந்த கைகள்' படத்தில் இவரும் நடிகர் ராம்கியும் இணைத்து நடித்த சண்டை காட்சிகள் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலம்.

1988ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'செந்தூர பூவே' தொடங்கி அஜித்தின் ஏகன், விஜயின் வில்லு மற்றும் விஜய் சேதுபதியின் ஜூங்கா ஆகிய படங்களில் இவர் தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த அருண் பாண்டியன் தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற 'ஹெலன்' என்ற படத்தின் தமிழாக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். தந்தை, மகள் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் கதைக்களம் என்பதால் இந்த படத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்க உள்ளார். 

கீர்த்தி பாண்டியன் அண்மையில் வெளியான தும்பா என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சிறந்த மேடை நாடக நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.          
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்