முகப்புகோலிவுட்

மதன் கார்க்கியுடன் மீண்டும் இணைகிறேன் - அருண் விஜய் ட்வீட்

  | October 17, 2019 14:44 IST
Arun Vijay

துனுக்குகள்

 • தமிழில் பாக்சர் படத்தில் பாக்சராக நடிக்கிறார் அருண் விஜய்
 • மூடர் கூடம் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கவிருக்கிறார்
 • 'மாஃபியா' மற்றும் 'ஏ.வி 30' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரன் கனத்தை உணர்ந்து அதன் ஜீவனை சிதைக்காமல் தரமான நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றுவருகிறார் இவர்.
 
அருண் விஜய் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான தடம் படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியகாவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பிரபாஸுடன் ‘சாஹோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் வசூல் சாதனை செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்களைத் தொடர்ந்து அருண் விஜய் 'மாஃபியா' மற்றும் 'ஏ.வி 30' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.வி 30' திரைப்படத்தில், மதன் கார்க்கியுடன் மீண்டும் இணைகிறேன் என்றும், இந்தப் படத்தில் சபீரின் மதிமயக்கும் இசைக்காக காத்திருக்கிறேன் என்றும் நடிகர் அருண் விஜய் தற்போது ட்வீட் செய்துள்ளார்.  
மூடர் கூடம் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண் விஜய். இப்படத்தைத் தொடர்ந்து பாக்சர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com