முகப்புகோலிவுட்

‘மாஃபியா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | January 25, 2020 13:03 IST
Mafia: Chapter 1

துனுக்குகள்

  • மாஃபியா திரைப்படத்தை கார்திக் நரேன் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தின் அருண் விஜய்க்கு வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார்.
  • இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிக்கும் ‘மாஃபியா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தியடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் மாஃபியா : சாப்டர்-1. இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கோகுல் பினாய் இப்படத்திற்கான கேமரா வேலைகளை கையாள, ஸ்ரீஜித் சாரங் ப்டத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் இரண்டாவது டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழி வெளீயிட்டுள்ளது. இப்படம் வரு பிப்ரவரி 21-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூரவ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜய்க்கு ‘குற்றம் 23', செக்கச் சிவந்த வானம்', ‘தடம்' என தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றுவரும் நிலையில், மாஃபியா திரைப்படத்துக்கும் ரசிகர்களிடையே ஏகபோகமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com