முகப்புகோலிவுட்

மனைவியின் அனுமதி பெற்று முத்தக் காட்சியில் நடித்த அருண் விஜய்?

  | February 08, 2019 16:39 IST
Arun Vijay  Thadam

துனுக்குகள்

  • இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்
  • சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் “தடம்”. 'செக்கச் சிவந்த வானம்' படத்துக்கு பிறகு அருண் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளார்.  
 
மேலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 22- ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
 
அப்போது பேசிய அருண்விஜய், டைரக்டர் என்னை முத்தக்காட்சியில் நடிக்க சொன்னார் நான் முடியாது என மறுத்துவிட்டேன். உடனே எனது மனைவியிடம் சம்மதம் வாங்கி நடிக்க வைத்தார் எனக் கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி,
 
 “பிடிக்காமல் தான் அந்த காட்சி மட்டும் 13 டேக்குகள் வாங்கினாரா?. அதுமட்டுமல்ல தணிக்கைக் குழுவினர் எங்களிடம் கேட்டது இந்தக் காட்சியில் ஹீரோ நடிகையின் உதட்டைக் கடித்துவிட்டாரா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இல்லை என அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது" என்றார்.
 
தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால் இதைப்பற்றி பேசவேண்டாம் என்று அருண் விஜய் மகிழ் திருமேனியிடம் கோரிக்கை வைத்தார். மகிழ் திருமேனி - அருண் விஜய்யின் இந்தப்பேச்சைக் கேட்டு அரங்கிலிருந்தவர்கள் சிரித்தனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்