முகப்புகோலிவுட்

அருண் விஜயின் ‘பாக்ஸர்’ பட அப்டேட் வழங்கும் ‘மெர்சல்’ தயாரிப்பாளர்..!

  | June 23, 2020 23:01 IST
Hema Rukmanai

இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்க, லண்டன் ஒளிப்பதிவாளர் Markus A Lujungbern ஒளிப்பதிவு செய்கிறார்.

அருண் விஜய் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கிய ‘மாஃபியா: சாப்டர் 1' திரைப்படத்தில், ‘ஆர்யன்/டெக்ஸ்டர்' என இரட்டை வேடங்களில் மிரட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார். அடுத்தடுத்தாக அக்னிச் சிறகுகள், வா டீல், பாக்ஸர், சினம் என பல படங்களை அடுத்தடுத்த வெளியீட்டுக்காக கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், பாக்ஸர் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. அதனை, தளபதி விஜயின் ‘மெர்ஸல்' திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் பெரிதும் அறியப்பட்ட ஶ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் CEO ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கிறார்.

Etcetera Entertainment பேனரில் வி. மதியழகன் தயாரிப்பில், விவேக் இயக்கும் திரைப்படம் ‘பாக்ஸர்'. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘இறுதி சுற்று' புகழ் ரித்திகா சிங் நடிக்கிறார். மேலும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்க, லண்டன் ஒளிப்பதிவாளர் Markus A Lujungbern ஒளிப்பதிவு செய்கிறார். 

அடுத்ததாக ஜிந்தாபாத் திரைப்படத்தில் நடிக்கும் அருண் விஜய், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு போலீஸ் திரைப்படம், மகிழ் திருமேனி மற்றும் அறிவழகன் இயக்கங்களில் சில படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com