முகப்புகோலிவுட்

லைகா தயாரிப்பில் அருண்விஜய்! கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா!!

  | July 03, 2019 15:59 IST
Arun Vijay

துனுக்குகள்

 • கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார்
 • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
 • அருண் விஜய் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்
துருவங்கள் பதினாறு, நரகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்த படத்தின் அறிவிப்பை  லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  அருண் விஜய்யின் 28-வது படமான இந்தப் படத்துக்கு மாஃபியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இணையவிருக்கும் பிரபலங்கள் குறித்து விரைவில் செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அருண் விஜய் தற்போது பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com