முகப்புகோலிவுட்

அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல குத்துச்சண்டை நாயகி...!

  | May 16, 2019 12:25 IST
Arun Vijay

துனுக்குகள்

  • விவேக் இப்படத்தை இயக்குகிறார்
  • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • மார்குஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதனைத் தொடர்ந்த அவர் பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு குத்துச்சண்டைக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது..
 
மார்குஸ் ஒளிப்பதிவு செய்கிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்