முகப்புகோலிவுட்

வியட்நாமில் சூர்யா வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய் !

  | May 22, 2019 15:12 IST
Arun Vijay

துனுக்குகள்

  • விவேக் இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தில் ரித்திகாசிங் நாயகியாக நடிக்கிறார்
  • இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் அருண் விஜய்
மகிழ்திருமேனியின் "தடம்" வெற்றியைத் தொடர்ந்து விவேக் என்பவர் இயக்கும் "பாக்ஸர்" என்ற படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்படும்  இந்தப் படத்தில் இறுதிச்சுற்றில் நடித்த ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்காக தற்காப்புக்கலை பயிற்சியை வியட்நாமில் எடுத்து வருகிறார் அருண் விஜய். 7 ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த வியட்நாம் நடிகர் ஜானி ட்ரி நியூயன் அருண் விஜய்க்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்து வருகிறார்.
 
அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பயிற்சியாளருடன் எடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்