முகப்புகோலிவுட்

மிரட்டும் அருண் விஜய்..! வெளியானது ‘மாஃபியா’ ஸ்னீக் பீக்..!

  | February 18, 2020 17:03 IST
Mafia

இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் ‘வேடன் வந்தாச்சோ' வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகவுள்ளதை முன்னிட்டு மாஃபியா : சாப்டர்-1 திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘மாஃபியா : சாப்டர்-1'. இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கோகுல் பினாய் இப்படத்திற்கான கேமரா வேலைகளைக் கையாள, ஸ்ரீஜித் சாரங் ப்டத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் இரண்டாவது டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் ‘வேடன் வந்தாச்சோ' வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. மிரட்டலான இந்த ஸ்னீக் பீக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜய்க்கு ‘குற்றம் 23', ‘செக்கச் சிவந்த வானம்', ‘தடம்' என தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றுவந்த நிலையில், மாஃபியா திரைப்படத்துக்கும் ரசிகர்களிடையே ஏகபோகமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்