முகப்புகோலிவுட்

‘சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் அருண் விஜய்!

  | August 17, 2019 16:56 IST
Arun Vijay

துனுக்குகள்

 • சஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண் விஜய்
 • இப்படம் ஆகஸ்ட் 30 வெளியாகிறது
 • இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது
இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ‘சஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ல் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸ், விஜய் நீல், அருண் விஜய், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பெரும் பொருட் செலவில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
 
தமிழில் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இயக்குநர் சுஜித், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரான், அருண் விஜய், ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தச் சந்திப்பில் பேசிய அருண் விஜய்,
 
“இந்த படத்தின் கதையை கேட்டுக்கும் போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன். சுஜித் சார் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். அவர் நடிகர்களை படப்பிடிப்பு தளங்களில் கையாளக்கூடிய ஆளுமையை கண்டு நான் வியந்து இருக்கிறேன்.
 
'பாகுபலி' படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. இரண்டரை ஆண்டுகள் கழித்து வரக்கூடிய படம் என்பதால் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்பத் தெளிவாக இருந்தார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ரொம்ப எளிமையான மனிதர்" என்று பேசினார் அருண் விஜய்.
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com