முகப்புகோலிவுட்

தீவிர உடற்பயிற்சியில் அருண் விஜய்; வைரலாகும் வீடியோ..!

  | May 28, 2019 21:12 IST
Arun Vijay

துனுக்குகள்

 • வி.மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்
 • இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் அருண் விஜய்
 • இதற்காக வியட்நாமில் பயிற்சி எடுத்திருக்கிறார் இவர்
தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பாக்ஸர். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக இவர் நடித்து வருகிறார். இதற்காக அருண் விஜய் வியட்நாமில் உள்ள லின் பாங்கில் பயிற்சி பெற்றிருக்கிறார்.  அருண் விஜய் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்ததாம்.
 
இவர் பயிற்சி எடுத்துக்ககொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
திட்டமிட்டபடி, இந்த ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க இருக்கிறது படக்குழு.
 
அருண் விஜய் பிரபாஸ்வுடன் சாஹோ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com