முகப்புகோலிவுட்

அருண் விஜய் அடுத்து யாரோடு கைகோர்க்கிறார் தெரியுமா…?

  | March 23, 2019 16:42 IST
Arun Vijay

துனுக்குகள்

  • மகிழ் திருமேனி தடம் படத்தை இயக்கி இருந்தார்
  • கார்த்திக் நரேன் துருவங்கள் 16 படத்தை இயக்கி இருந்தார்
  • பிரபாஸ் நடிக்கும் படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்து வெளியான படம் ‘தடம்'. விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய் பிராபாஸ் நடிக்கும் படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து அருண் விஜய் அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இதனைத்தொடர்ந்து  துருவங்கள் 16 படத்தை இயக்கி இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்த கார்த்திக் நரேன் இயக்கத்திலும் இவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்