முகப்புகோலிவுட்

அரை சதம் அடித்த அருண் விஜய்யின் தடம்…!

  | April 19, 2019 16:30 IST
Arun Vijay

துனுக்குகள்

  • மகிழ் திருமேனி தடம் படத்தை இயக்கி இருந்தார்
  • அருண் விஜய் இரட்டை வேடமிட்டு நடித்த படம் இது
  • 50 நாளை கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் உலகின் பல்வேறு இடங்களில் நடந்த நீதி மன்ற வழக்கை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படமாகும்.
 
இந்த படத்தில் அருண் விஜய் இரட்டைவேடமிட்டு நடித்திருந்தார். கதாநாயகிகளாக தன்யா ஹோப்,  ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
 
தடம் திரைப்படம் தற்போது 50வது நாளை கடந்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் அருண் விஜய், திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து, கிரிவலம் சென்றிருக்கிறார். இதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் அருண் விஜய் பதிவு செய்திருக்கிறார். தடம் வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்