முகப்புகோலிவுட்

“பாக்ஸர்” படத்தின் மாஸ் பர்ஸ்ட் லுக்; கட்டுமஸ்தான தோற்றத்தில் அருண் விஜய்!

  | July 05, 2019 11:57 IST
Boxer

துனுக்குகள்

  • விவேக் இப்படத்தை இயக்குகிறார்
  • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
தடம் திரைபடத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பாக்ஸர். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக இவர் நடித்து வருகிறார். இதற்காக அருண் விஜய் வியட்நாமில் உள்ள லின் பாங்கில் பயிற்சி பெற்றிருக்கிறார்.  
 
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சணா கல்ராணி நடித்து வருகிறார். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.
 
இயக்குநர் விவேக் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதில் “9மாத உழைப்பு இதோ உங்கள் பார்வைக்கு என்று” பதிவிட்டிருக்கிறார். இந்த படத்தை அடுத்து  இவர் நடிப்பில் மாஃபியா திரைப்படம் தயாராகி வருகிறது. 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்