முகப்புகோலிவுட்

பாக்ஸரான அருண் விஜய்

  | November 19, 2018 12:42 IST
Arun Vijay

துனுக்குகள்

  • அருண் விஜய் கைவசம் நான்கு படங்கள் உள்ளது
  • அருண் விஜய்யின் புதிய படத்துக்கு ‘பாக்ஸர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது
  • இது அருண் விஜய்யின் கேரியரில் 27-வது படமாம்
மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் கைவசம் மகிழ் திருமேனியின் ‘தடம்', ரத்ன சிவாவின் ‘வா டீல்', பிரபாஸின் ‘சாஹோ', விஜய் ஆண்டனியின் ‘அக்னிச் சிறகுகள்' என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அருண் விஜய் கமிட்டாகியுள்ளார். ‘பாக்ஸர்' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் என்பவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அருண் விஜய்யே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

இது அருண் விஜய்யின் கேரியரில் 27-வது படமாம். லியோன் இசையமைக்கவுள்ள இதற்கு மார்கஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், மதன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இதனை ‘Etcetera எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்