முகப்புகோலிவுட்

‘தல - தளபதி’ பற்றி பேசிய ‘அருவா’ நடிகை.! #AskRaashi

  | May 04, 2020 19:04 IST
Raashi Khanna

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தனது 39-வது திரைப்படமான ‘அருவா’வில், ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை ராஷி கண்ணா நேற்று மாலை தனது சமூக ஊடக பக்கத்தில் தனது ரசிகர்களுடன் #AskRaashi என்ற ஹாஷ்டேக் மூலம் உரையாடினார். அவரது ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை வீசினர், மேலும் ராஷி அவர்களுக்கு மகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ராஷியின் விருப்பமான நடிகர் யார் என்று ரசிகர்களில் ஒருவர் கேட்டபோது, “தளபதி விஜய் சார்” என்று பதிலளித்துள்ளார். அதையடுத்து, மற்றொரு ரசிகர் ‘தல' அஜித் பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டதற்கு அவர் “அழகு” (Charming) எனக் கூறியுள்ளார். மேலும், தெலுங்கு திரையுலகில் தனக்கு பிடித்த நடிகை சமந்தா என்று அவர் கூறினார் .

அதையடுத்து, தமிழ் திரையுலகில் பல சிறந்த இயக்குநர்கள் உள்ளனர் என்று கூறிய ராஷி கண்ணா "எனக்கு வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லீ மிகவும் பிடிக்கும்!" எனக் கூறியுள்ளார்.

தன்னால் முடிந்தவரை நேர்மறையாக இருக்க முயற்சிப்பதாகக் கூறும் ராஷி கண்ணா, இந்தப் பூட்டுதலில் தனக்கு ஊக்கமளிக்கும் வீடியோக்களைப் பார்ப்பதாகவும், தன் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தனது 39-வது திரைப்படமான ‘அருவா'வில், ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமான ராஷி கண்ணா, அதையடுத்து தமிழில் அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் காணப்பட்டார். தற்போது, சைத்தான் கா பச்சா மற்றும் அரண்மனை-3 படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com