முகப்புகோலிவுட்

'செக்கச்சிவந்த வானம்' டீமுக்கு குட்-பை சொன்ன அரவிந்த் சாமி

  | May 07, 2018 10:19 IST
Chekka Chivantha Vaanam Shooting

துனுக்குகள்

 • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’
 • இதில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறதாம்
 • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா,தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறதாம்.

விஜய் சேதுபதி போலீஸாக வலம் வரவுள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, நடிகர் அரவிந்த் சாமி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com